ஆட்டோ டிரைவர் குத்திக்ெகாலை
தீப்பெட்டி கொடுக்காததால் ஆத்திரம் அடைந்து ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதூர்,
தீப்பெட்டி கொடுக்காததால் ஆத்திரம் அடைந்து ஆட்டோ டிரைவர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆட்டோ டிரைவர் கொலை
மதுரை காதக்கிணறு பகுதியில் வசித்து வந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 38). ஆட்ேடா டிரைவர். திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் சம்பவத்தன்று பட்டாசு வாங்கி கொண்டு ஒத்தக்கடை மதுக்கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த வாலிபர்கள் 4 பேர் அங்கு வந்தனர். அவர்கள் ராமகிருஷ்ணனிடம், தீப்பெட்டி கேட்டு உள்ளனர். அதற்கு அவர் தன்னிடம் இல்லை என கூறி இருக்கிறார்.அதன்பிறகு தீப்பெட்டி இல்லாமல் எதற்கு பட்டாசு வாங்கி இருக்கிறாய்? என்று கேட்டு அவரிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். பின்னர் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராமகிருஷ்ணனை அடித்து உதைத்து சரமாரியாக கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து ஓடி விட்டனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
தீபாவளி அன்று அவர் இறந்ததால் அவரது மனைவி, குழந்தைகள் கதறி அழுதனர். உடனே அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரண்டு ஆட்டோ டிரைவரை கொலை செய்தவர்களை கைது செய்ய வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்து போலீஸ் அதிகாரிகள் அங்கு சென்று சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
4 பேர் கைது
இதை தொடர்ந்து ஊமச்சிகுளம் துணை போலீஸ் சூப்பிரண்டு காட்வின் ஜெகதீஷ்குமார் உத்தரவின் பேரில் ஒத்தக்கடை போலீஸ் இன்ஸ்ெபக்டர் ஆனந்த தாண்டவம் தலைமையிலான தனிப்படை போலீசார் கொலை தொடர்பாக ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த சஞ்சய்குமார்(வயது 19), அஜித்குமார்(26), முத்துபாண்டி(27), மருதுபாண்டி(24) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.