சேதமடைந்த சாலையில் தேங்கி நிற்கும் மழைநீர்

விருதுநகரில் சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆதலால் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update:2021-11-06 01:48 IST
விருதுநகர்,
விருதுநகரில் சேதமடைந்த சாலையில் மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆதலால் சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
பிரதான சாலை
 விருதுநகரில் இருந்து  பேராலி உள்ளிட்ட முக்கிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலையாக உள்ளது ஏ.ஏ.ரோடு. இந்த சாலையின்  இருபுறமும் குடியிருப்புக்கள் உள்ள நிலையில நூற்பாலை உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு செல்ல இந்த ரோடு தான் பிரதான வழியாக உள்ளது.
இந்த சாலை தற்போது முற்றிலுமாக சேதமடைந்து விட்ட நிலையில் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. மேலும் இந்த ரோட்டில் இருந்து தான் அரசு ஆஸ்பத்திரி புதிய கட்டிட கட்டுமான பணிக்கான கான்கிரீட் கலவை தயாரிப்பு பணி நடைபெறுவதால் ரோடு முற்றிலுமாக சேதமடைந்து விட்டது. இதனால் பேராலி உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் போக்குவரத்து கழக பஸ்கள் மிகுந்த சிரமப்பட்டு சென்று வரும் நிலை உள்ளது.
கழிவுநீர் கால்வாய் 
 இரு சக்கர வாகனங்களில் செல்வோர் இந்த சாலை வழியாக செல்ல முடியாத நிலையில் விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர். நீண்ட நாட்களாக அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனின் முகாம் அலுவலகமாக செயல்பட்டு வந்த நூற்பாலை வளாகமும் இந்த ரோட்டில் தான் உள்ளது.
 ஆனாலும் இந்த ரோட்டை நகராட்சி நிர்வாகம் கவனிக்க தயாரில்லை. இதே நிலையில் இந்த ரோடு நீடித்தால் போக்குவரத்துக்கழக நிர்வாகம் இந்த ரோடு வழியாக கிராமப்புறங்களுக்கு செல்லும்பஸ்களை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டு விடும். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக ஏ.ஏ. ரோட்டை சீரமைக்க தேவையான நிதி ஒதுக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் இந்த ரோட்டை சீரமைக்க வேண்டியது அவசியமாகும். மேலும் இந்த ரோட்டின் இருபுறமும் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படாததால் மழைக்காலங்களில் இந்த ரோட்டில் கழிவுநீர் தேங்கி மழைநீர் வெள்ளப்பெருக்கெடுத்து ஓடுகிறது.  எனவே சாலையை சீரமைக்கும் பொழுது முறையாக கழிவுநீர் கால்வாய்கள் அமைத்து தர நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

மேலும் செய்திகள்