நகராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை

விருதுநகர் நகராட்சி அலுவலகத்தை நேற்று பெண்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-11-05 20:16 GMT
விருதுநகர், 
விருதுநகர் 32-வது வார்டில் உள்ள சிவந்திபுரம் ஆத்துமேட்டுபகுதியில் வசிக்கும் பெண்கள் நேற்று நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்கள் பகுதியில் கடந்த 20 நாட்களாக பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் தேங்கி இருப்பதாகவும், வீடுகளுக்குள் கழிவுநீர் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ள நிலையில் தான் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், இதனால் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதால் பாதிப்பு ஏற்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர். பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய தேவையான சாதனங்களை மதுரையிலிருந்து வாங்க வேண்டிய நிலையில் உள்ளதால் சுத்தம் செய்ய இயலவில்லை என்று நகராட்சி ஊழியர்கள் தெரிவித்ததை தொடர்ந்து அப்படியானால் எங்களுக்கு பாதாள சாக்கடை திட்டம் தேவை இல்லை. கழிவுநீர் கால்வாய் கட்டிக் கொடுங்கள் என்றும் அவர்கள் முறையிட்டனர். நகராட்சி அலுவலகத்தில் விடுமுறை தினமானதால் அதிகாரிகள் யாரும் இல்லாத நிலையில் மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசம் செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் முற்றுகை போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்