வெம்பக்கோட்டை அணையின் நீர்மட்டம் உயர்வு

வெம்பக்கோட்டை அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-11-05 19:49 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 
தொடர்மழை 
வெம்பக்கோட்டை மற்றும் அதன்  சுற்றுவட்டார பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சிவகாசிக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் வெம்பக்கோட்டை அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. 
 நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் தொடங்கிய மழை இரவு 9 மணி வரை மழை நீடித்தது. தாயில்பட்டி ஊராட்சியை சேர்ந்த பச்சையாபுரம், செக்கடி தெரு, உள்ளிட்ட தாழ்வான பகுதிகளில் மழைநீர் உள்ளே புகுந்ததால் குடியிருப்புவாசிகள் மிகவும் சிரமப்பட்டனர்.  தொடர்மழை காரணமாக வெம்பக்கோட்டை அணை தற்போது 6 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி 
மேலும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக நீர்வரத்து தொடர்ந்து இருப்பதாலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர வாய்ப்புள்ளது. இதனால் வல்லம்பட்டி, புல்லக்கவுண்டன்பட்டி, கொம்மங்கியாபுரம், மஞ்சள்ஓடைப்பட்டி, ஜெகவீரன்பட்டி கரிசல்குளம், மீனாட்சிபுரம், அம்மையார்பட்டி, செவல்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் பருத்தி, மக்காச்சோளம், சூரியகாந்தி உள்ளிட்ட மானாவாரிபயிர்களுக்கு இந்த மழை நல்லது என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறினர். 
வெம்பக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் விவசாய பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

மேலும் செய்திகள்