விபத்தில் வாலிபர் பலி
சிவகாசி அருகே விபத்தில் வாலிபர் பரிதாபமாக பலியானார்.;
சிவகாசி,
சிவகாசி அருகே உள்ள நடையனேரி கிராமத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி (வயது 36). இவர் விருதுநகர்-எரிச்சநத்தம் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று இவர் மீது பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த துரைப்பாண்டியை அருகில் இருந்த பால்ராஜ் என்பவர் மீட்டு விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்க சென்றார். ஆஸ்பத்திரி செல்லும் வழியில் துரைப்பாண்டி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.