தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-05 19:35 GMT
திருச்சி
தினத்தந்தி புகார் பெட்டிக்கு நன்றி 
திருச்சி 11-வது வார்டு சறுக்குப்பாறை, மாநகராட்சி நவீன கழிப்பிடம், அங்கன்வாடி பள்ளி எதிரில் சாலையின்  நடுவில் பாதாள சாக்கடையின் மேல்  மூடி இல்லாமல் திறந்து கிடந்தது. இதுகுறித்து தினத்தந்தி புகார் பெட்டி பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை பார்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து பாதாள சாக்கடையின் மேல் மூடி அமைத்தனர். இதற்கு அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர். 
பொதுமக்கள், திருச்சி. 

தார் சாலை அமைக்க வேண்டும்
புதுக்கோட்டை நகரப்பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக நிறைய தார் சாலை அமைக்கப்பட்டது. பூங்கா நகர் மேற்கு பகுதியில் ஸ்டேட் பேங்க் பின்புறம் மூன்று வீதிகளில் தார்சாலை அமைக்கப்படவில்லை. தற்போது மழை காலமாக இருப்பதால் சேறும், சகதியுமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இந்த மூன்று வீதிகளில் உள்ள மண் சாலையை தார் சாலையாக மாற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பூங்கா நகர், புதுக்கோட்டை. 

பராமரிக்கப்படாத பசுமைப்பூங்கா 
திருச்சி மாவட்டம், பஞ்சப்பூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் குழந்தைகள் விளையாடுவதற்கும், காலை, மாலை நேரத்தில் பொதுமக்கள் அமர்ந்து செல்லும் வகையிலும் பசுமைப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.  இந்த பூங்கா பராமரிப்பு இன்றி செடிகொடிகள் முளைத்துபயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இப்பகுதியில் விஷ ஜந்துக்கள் நடமாட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மருதாந்தகம், எடமலைப்பட்டிப்புதூர், திருச்சி. 

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி விமான நிலையம் வயர்லெஸ் சாலை அருகில் கிழக்கு இந்திராநகர் விரிவாக்கம் சாலையில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீர் மண்சாலையில் செல்கிறது. இதனால் சாலை சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதுடன் சாலையில் மண் அரிப்பு ஏற்படுகிறது. இந்த சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லவும், வாகனத்தில் செல்லவும் முடியாமல் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சையது முகமது,விமானநிலையம், திருச்சி.
இதேபோல் அரியலூர் மாவட்டம் , ஏலாக்குறிச்சி ஊராட்சியில் கரையான்றகுறிச்சி கிராமத்திற்கு உள்ளே செல்லும் சாலை வடிகால் வசதி இல்லாததால் சாலை முழுவதும் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும் அதிக மழைபெய்யும்போது தாழ்வான பகுதிகளில்  உள்ள வீடுகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
நவீன்குமார், கரையான்றகுறிச்சி, அரியலூர். 

குழாயில் உடைப்பு ஏற்பட்டு வீணாகும் குடிநீர் 
கரூர் மாவட்டம், கடவூர் தாலுகா தரகம்பட்டி காளியம்மன் கோவில் முன்புறம் காவிரி குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இதனை அப்பகுதியில் போதிய குடிநீர் கிடைக்காமல் அப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ரத்தினாசலம் செல்வம், தரகம்பட்டி, கரூர். 

சேறும், சகதியுமான பாதை
பெரம்பலூர் மாவட்டம், பாடாலூர் மேற்கு பகுதியில் மயானபகுதியில் இருந்து அன்னைமேல்நிலைபள்ளிக்கும் குடியிருப்புகள் மற்றும் வயல்களுக்கு செல்லும் பாதை உள்ளது. இந்த பாதை மிகவும் மோசமாகி கழிப்பிட பகுதியாக மாறியுள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், பாடாலூர், பெரம்பலூர். 

எரியாத மின்விளக்குகள் 
திருச்சி திருவானைக்காவல் கும்பகோணம் சாலையில் இரவில் தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருளை பயன்படுத்தி குற்ற சம்பவங்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. மேலும் தெருவிளக்கு வசதி இல்லாததால் பெண்கள் அப்பகுதியில் நடந்து செல்ல பெரிதும் அச்சப்படுகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்  என கேட்டுக்கொள்கிறோம். 
சந்திரமோகன், திருவானைக்காவல், திருச்சி.


மேலும் செய்திகள்