லாரி-கார் மோதல்; வக்கீல் பலி
மேலூர் அருகே லாரி-கார் மோதலில் வக்கீல் பலியானார்.
மேலூர்,
திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடியை சேர்ந்தவர் சேரலாதன் (வயது 37). இவர் சென்னையில் வக்கீலாக பணிபுரிந்து வந்தார். இவர் சென்னையில் இருந்து காரில் கள்ளிக்குடிக்கு வந்தார். காரை செந்தில்குமார்(30) என்ற டிரைவர் ஓட்டி வந்தார். மேலூர் அருகே கூத்தப்பன்பட்டி என்னுமிடத்தில் வந்தபோது கார் நிலை தடுமாறி நான்குவழி சாலையின் மறுபக்கம் சென்றது. அப்போது எதிர் திசையில் நாகர்கோவிலில் இருந்து பண்ருட்டிக்கு வந்த ஒரு டேங்கர் லாரி மீது கார் மோதியது. இந்த விபத்தில் கார் நொறுங்கியது. படுகாயம் அடைந்த சேரலாதன், செந்தில்குமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு வழியில் சேரலாதன் பரிதாபமாக இறந்தார். செந்தில்குமார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து மேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.