மோட்டார் சைக்கிள் விபத்தில் காவலாளி பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் காவலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-11-05 18:20 GMT
கரூர்
தோகைமலை
தோகைமலை அருகே உள்ள கல்லடை ஊராட்சி பெருமாள் கோவில்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (50). இவர் மணப்பாறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காவலராக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் தீபாவளியை முன்னிட்டு காவல்காரன் பட்டிக்கு முடி வெட்டுவதற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். புத்தூர் பிரிவு சாலை அருகே சென்றபோது எதிரே ஆர்ச்சம்பட்டி வடக்குத்தெருவை சேர்ந்த வேலுசாமி ( 60). அவரது மகன் ராஜா ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிள், முருகேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த 3 பேரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே முருகேசன் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து முருகேசன் மகன் பாரதி கொடுத்த புகாரின்பேரில் தோகைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்