தீபாவளியையொட்டி ரூ15 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ15 கோடியே 4 லட்சத்திற்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.

Update: 2021-11-05 17:26 GMT
வேலூர்,
வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தீபாவளி பண்டிகையையொட்டி 2 நாட்களில் ரூ.15 கோடியே 4 லட்சத்திற்கு மதுபானம் விற்பனையாகி உள்ளது.

தீபாவளி பண்டிகை

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் டாஸ்மாக் நிர்வாக வசதிக்காக வேலூர், அரக்கோணம் என 2 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. வேலூர் கோட்டத்தில் வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களும், அரக்கோணம் கோட்டத்தில் ராணிப்பேட்டை மாவட்டமும் உள்ளன. வேலூர் கோட்டத்தில் 115 கடைகளும், அரக்கோணம் கோட்டத்தில் 88 கடைகளும் உள்ளன.

தீபாவளிபண்டிகை நேற்று  கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் காலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பண்டிகையை கொண்டாடினர். சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்து மகிழ்ந்தனர்.

மதுபிரியர்கள் தீபாவளி பண்டிகையை மது குடித்து கொண்டாடுவார்கள். அதன்படி தீபாவளி பண்டிகையையொட்டி மது விற்பனை அமோகமாக இருந்தது. இதையொட்டி கடைகளில் ஹாட் மற்றும் பீர் வகைகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

கடந்த 3-ந் தேதி மற்றும் நேற்று  ஆகிய 2 நாட்கள் வழக்கத்தைவிட கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மதுபிரியர்கள் தங்களுக்கு பிடித்த மதுபானங்களை வாங்கி சென்றனர்.

ரூ.15 கோடிக்கு விற்பனை

வேலூர் டாஸ்மாக் கோட்டத்தில் கடந்த 3-ந் தேதி ரூ.4 கோடியே 58 லட்சத்துக்கும், தீபாவளி அன்று ரூ.4 கோடியே 80 லட்சத்துக்கும் மதுபானங்கள் விற்பனை ஆனது.

இதேபோன்று அரக்கோணம் கோட்டத்தில் 3-ந் தேதி ரூ.2 கோடியே 95 லட்சத்துக்கும், தீபாவளியன்று ரூ.2 கோடியே 71 லட்சத்துக்கும் என இரு கோட்டங்களையும் சேர்த்து 2 நாட்களில் மொத்தம் ரூ.15 கோடியே 4 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனையானது.

கடந்த 2019-ம் ஆண்டு 2 நாட்கள் ரூ.13 கோடியே 10 லட்சத்திற்கும், கடந்த ஆண்டு ரூ.16 கோடியே 7 லட்சத்திற்கும் மதுபானங்கள் விற்பனை ஆனது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூ.1 கோடியே 3 லட்சத்திற்கு மதுபானங்கள் விற்பனை குறைந்துள்ளதாக டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்தனர்

மேலும் செய்திகள்