உலக நன்மை வேண்டி சிறப்பு யாகம்

கோபால்பட்டி அருகே உலக நன்மை வேண்டி சிறப்பு யாக பூஜை நடந்தது.;

Update: 2021-11-05 17:25 GMT
திண்டுக்கல்: 

கோபால்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான்பாறையில் ஆதிபரஞ்ஜோதி சகலோக சபை மடம் உள்ளது. இங்கு ஐப்பசி மாத அமாவாசையையொட்டி உலக நன்மை வேண்டி யாக பூஜை நடைபெற்றது. இதனை மடத்தின் நிர்வாகி திருவேங்கட ஜோதி பட்டாச்சாரியார் நடத்தினார். 

பூஜையில் மூட்டை மூட்டையாக மிளகாய் கொட்டப்பட்டு யாகம் வளர்க்கப்பட்டது. பின்னர் மந்திரங்கள் ஓதி பூஜை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்கள் மற்றும் திண்டுக்கல், மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் செய்திகள்