மின்கம்பத்தில் மோதி வாலிபர் பலி

மின்கம்பத்தில் மோதி வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2021-11-05 17:16 GMT
தேவகோட்டை, 
தேவகோட்டை அருகே உள்ளது மஞ்சனி கிராமம். அந்த கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன். அவரது மகன் ராஜசேகர் (வயது23). இவர் தேவகோட்டை வாரச்சந்தை பகுதியில் இருந்து கண்டதேவி காலையில் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். 
அப்போது கருதாவூரணி அருகே சாலை யோரம் இருந்த மின்கம்பத்தில் நிலைதடுமாறி மோதினார். இதில் அவர் படுகாயம் அடைந்து உயிரிழந்தார். அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இதுகுறித்து தேவகோட்டை நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்