17 மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது

தீபாவளி விருந்துக்கு 17 மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யபட்டனர்

Update: 2021-11-05 17:12 GMT
திருப்பத்தூர், 
தீபாவளி விருந்துக்கு 17 மயில்களை வேட்டையாடிய 2 பேர் கைது செய்யபட்டனர்.
ரகசிய தகவல்
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கீழச்சிவல்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் தீபாவளி விருந்துக்கு சமையல் செய்வதற்காக மயில்கள் வேட்டை யாடப்படுவதாக ரகசிய தகவல் திருப்பத்தூர் வனத்துறை யினருக்கு கிடைத்துள்ளது. 
இதையடுத்து அங்கு விரைந்து சென்ற திருப்பத்தூர் வனத்துறையினர் வாகன சோதனை செய்தனர். 
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரைபிடித்து சோதனையிட்டபோது சாக்கில் வேட்டையாடி மயில்களின் இறகுகளை நீக்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசார ணையில் மயில்களை வேட்டையாடியது பொன்னமராவதி பகுதியை சேர்ந்த ராஜா (வயது35), தியாகராஜன் (32) என்பது தெரியவந்தது. 
கைது
2 பேரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களிடம் இருந்து இறந்த நிலையில் 17 மயில்கள், 2 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்து திருப்பத்தூர் வனத துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.  இதுபோன்ற சம்பவங்களை தடுக்க கிராமங்களில் வனத்துறையினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்