புனித ஹஜ் பயணத்துக்கு தமிழக விமான நிலையத்தை அனுமதிக்க கோரிக்கை
புனித ஹஜ் பயணத்துக்கு தமிழக விமான நிலையத்தை அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து ஹாஜிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழக்கரை,
புனித ஹஜ் பயணத்துக்கு தமிழக விமான நிலையத்தை அனுமதிக்க வேண்டும் என்று அனைத்து ஹாஜிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹஜ் பயணம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமானில் இருந்து புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் ஹஜ் யாத்ரீகர்கள் சென்னை விமான நிலையம் மூலம் சவுதி அரேபியா சென்று திரும்புவது வழக்கம். தற்போது மத்திய அரசு இந்தியாவில் இருந்து ஹஜ் செல்லும் விமான நிலையங்களை 20-ல் இருந்து 10 ஆக குறைத்து உள்ளது.
நீக்கப்பட்ட 10 விமான நிலையங்களில் தமிழகத்தில் உள்ள சென்னை விமான நிலையம் ஒன்று இதனால் மிக நீண்ட பயணம் மேற்கொண்டு மொழி தெரியாத வெவ்வேறு மாநிலங்களுக்கு சென்று விமானத்தில் பயணம் செய்யவேண்டிய நிலை உள்ளது. இதனால் பயணச் செலவு அதிகமாகிறது.
வலியுறுத்தல்
ஹஜ் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு நீக்கப்பட்ட 10 விமான நிலையங் களின் தடையை நீக்கி தமிழகத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து தமிழக மக்கள் ஹஜ் பயணம் செல்ல தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று அனைத்து ஹாஜிகளின் சார்பில் ராமநாதபுரம் மாவட்ட டவுன் காஜி சலாஹூத்தீன் ஆலிம் வலியுறுத்தி உள்ளார்.