காரைக்கால் மாவட்டத்தில் 4 ஆயிரம் எக்டேர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது

காரைக்கால் மாவட்டத்தில் 4 ஆயிரம் எக்டேர் நெற்பயிர் தண்ணீரில் மூழ்கியது

Update: 2021-11-05 17:04 GMT
காரைக்கால், நவ.5-
காரைக்கால் மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் 4 ஆயிரம்    எக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளது.
தொடர் மழை
காரைக்கால் மாவட்டத்தில் அம்பகரத்தூர், நல்லம்பல், தென்னங்குடி, சேத்தூர், திருநள்ளாறு, நிரவி, விழிதியூர், நெடுங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் எக்டேரில் நேரடி விதைப்பும், 4 ஆயிரம் எக்டேரில் நடவு மூலம் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டது. 
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள ஆறுகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள வயல்களில் தேங்கியுள்ள தண்ணீர் வடிய வழியின்றி உள்ளது. 
விவசாயிகள் கவலை
இதன் காரணமாக சுமார் 4 ஆயிரம் எக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் பல நாட்களாக நீரில் மூழ்கியுள்ளது. இவை அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
எனவே, வயலில் தேங்கியுள்ள மழை நீரை வடியவைக்க, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று விவசாயிகள்கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்