கோவை ஈச்சனாரியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்

கோவை ஈச்சனாரியில் நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த கார்;

Update: 2021-11-05 17:01 GMT
கோவை

கோவை காரமடை பகுதியை சேர்ந்தவர் நசீர். இவர் தனது குடும்பத்துடன் கிணத்துக்கடவில் நடந்த தனது உறவினரின் இல்ல திருமண விழாவிற்காக காரில் சென்றார். அப்போது கார் ஈச்சனாரி அருகே வந்தபோது திடீரென அதிகளவு புகையுடன் தீ பிடித்ததாக தெரிகிறது. 

இதையடுத்து காரில் இருந்த நசீர் உள்பட 5 பேரும் உடனடியாக வெளியே வந்தனர். அப்போது கார் முழுவதும் தீப்பிடித்து எரிய தொடங்கியது. மேலும் சாலையில் சென்றவர்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி எரிந்துகொண்டிருந்த வேனை பார்த்தனர். இதனால் அந்த சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் உடனடியாக காரில் எரிந்த தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் கார் முற்றிலும் எரிந்து நாசமானது. 

காரில் இருந்த 5 பேரும் உடனடியாக இறங்கியதால் உயிர் தப்பினர். காரில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தீப்பற்றியதாக கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்