சேற்றில் சிக்கிய அரசு பஸ்

சேற்றில் சிக்கிய அரசு பஸ்

Update: 2021-11-05 14:48 GMT
கூடலூர்

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட ஆரோட்டுப்பாறைக்கு நேற்று காலை 11.15 மணிக்கு பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. ஆரோட்டுப்பாறை அருகே பழைய போலீஸ் நிலைய பகுதியில் சென்றபோது எதிரே ஜீப் வந்தது. உடனே டிரைவர் வழிவிடுவதற்காக பஸ்சை சாலையோரம் ஒதுக்கினார். 

அப்போது திடீரென அங்கிருந்த பள்ளத்தில் சக்கரம் சிக்கியது. சேறும், சகதியுமாக இருந்ததால் உடனடியாக பஸ்சை இயக்க முடியவில்லை. இதனால் நடுவழியில் பயணிகள் அவதி அடைந்தனர். பின்னர் 2 ஜீப்புகள் வரவழைக்கப்பட்டு, 2 மணி நேரம் போராடி பொதுமக்கள் உதவியுடன் கயிறுகள் கட்டி பஸ் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்