தூத்துக்குடி அருகே சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்

தூத்துக்குடி அருகே சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-11-05 14:36 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, தபால் அலுவலக தெருவில் பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருந்ததாக கூட்டாம்புளியை சேர்ந்த மாணிக்கராஜ் (வயது 41), மாசாணமுத்து (51), செல்வசுந்தர் (36), வெள்ளதுரை (52), பட்டுலிங்கம் (49), அழகுமுத்து (53) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 பணமும் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்