ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதையொட்டி பொதுமக்கள் புத்தாடைகள் அணிந்தும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினர். குடும்பத்தினர் தங்களது குழந்தைகளுடன் வீடுகள் முன்பு மற்றும் வீதிகளில் பட்டாசுகள் வெடித்து மகிழ்ந்தனர்.
தீபாவளியையொட்டி ஊட்டி நகரில் நேற்று குப்பைகள் வழக்கத்தை விட அதிகமாக ஆங்காங்கே குவிந்து கிடந்தது. அதில் பட்டாசுகள் வைக்க பயன்படுத்திய அட்டைகளும் இருந்தன. தொடர்ந்து நகராட்சி தூய்மை பணியாளர்கள் குப்பைகளை அள்ளி வாகனங்களில் ஏற்றி தீட்டுக்கல் குப்பை கிடங்குக்கு கொண்டு சென்று கொட்டினர்.
வழக்கமாக ஊட்டி நகராட்சியில் ஒரு நாளைக்கு 30 டன் குப்பைகள் சேகரமாகும். தீபாவளியையொட்டி நேற்று ஊட்டியில் 44 டன் குப்பைகள் சேகரமானது. இதனை தூய்மை பணியாளர்கள் அப்புறப்படுத்தி சுத்தம் செய்தனர்.