உயிருக்கு போராடிய காட்டெருமை மீட்பு

உயிருக்கு போராடிய காட்டெருமை மீட்பு

Update: 2021-11-05 14:07 GMT
கோத்தகிரி

கோத்தகிரி அருகே தாந்தநாடு கிராமத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் நேற்று முன்தினம் மாலை கழுத்தில் பிளாஸ்டிக் கயிறு இறுக்கி ஆபத்தான நிலையில் காட்டெருமை ஒன்று உயிருக்கு போராடி கொண்டு இருந்தது. இதை கண்ட தொழிலாளர்கள் கட்டபெட்டு வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். 

அதன்பேரில் அங்கு வனவர் பெலிக்ஸ், வனக்காவலர் ராஜேஷ், வனக்காப்பாளர் சிவக்குமார் மற்றும் வனத்துறையினர் விரைந்து வந்தனர். பின்னர் காட்டெருமையின் கழுத்தில் சிக்கி இருந்த பிளாஸ்டிக் கயிற்றை வெட்டி அகற்றினர். மேலும் அதன் கழுத்தில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் அந்த காட்டெருமை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது.

மேலும் செய்திகள்