ஜவுளிக்கடையில் தீ விபத்து

ஜவுளிக்கடையில் தீ விபத்து

Update: 2021-11-05 10:04 GMT
திருப்பூர்,
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் திலீப் குமார் என்பவருக்கு சொந்தமான ஜவுளிக்கடை உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கடையில் நேற்றுமுன்தினம் இரவு சாமி கும்பிட்டவர்கள், சாமி படம் முன் வைக்கப்பட்டிருந்த விளக்கை அணைக்காமல் கடையை பூட்டி சென்றதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 8.30 மணி அளவில் கடைக்குள் இருந்து கரும்புகை வருவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தெற்கு தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அதிகாரி சண்முகம் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் 1 மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அனைத்தனர். தீ விபத்தில் கடையில் இருந்த துணிகள் உட்பட ஏராளமான பொருட்கள் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து தெற்கு போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர்.

----

மேலும் செய்திகள்