நெல்லை:
நெல்லை பேட்டை நாராயணசாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஜெபஸ்டியான் மனைவி பொன்னுத்தாய் (வயது 72). இவர் தனக்குச் சொந்தமான 2 ஆடுகளை அந்த பகுதியில் மேய விட்டிருந்தார். அப்போது மர்ம நபர் 2 ஆடுகளையும் திருடிச் சென்று விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் நெல்லை டவுன் குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
அதில் ஆடுகளை திருடிச் சென்றது, பேட்டை கக்கன்ஜி நகரை சேர்ந்த ராஜா (45) என்பது தெரியவந்தது. உடனே அவரை கைது செய்தார்.