மூலைக்கரைப்பட்டி அருகே அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்று இளம்பெண் தற்கொலை

அதிகமாக தூக்க மாத்திரைகள் தின்று இளம்பெஅளவுக்கு ண் தற்கொலை

Update: 2021-11-03 21:42 GMT
இட்டமொழி:
மூலைக்கரைப்பட்டி அருகே, அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைகளை தின்று இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
இதுபற்றி போலீஸ்் தரப்பில் கூறப்பட்டதாவது:-
இளம்பெண்
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள ஆனையப்பபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமையா. இவரது மனைவி வேலம்மாள் (வயது 35).
ராமையா 2 ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்து விட்டார். இவர்களுக்கு குழந்தையும் இல்லாததால் வேலம்மாள் அதே ஊரில் தனது வயது முதிர்ந்த தாயார் பரிபூரணத்தம்மாளுடன் வசித்து வந்தார். கணவரும் இல்லாமல், குழந்தைகலும் இல்லாததால் வேலம்மாள் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
தற்கொலை
இந்தநிலையில் அவர் கடந்த 31-ந் தேதி அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை தின்று வீட்டில் மயங்கி கிடந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வேலம்மாள் நேற்று இறந்தார். இதுகுறித்து மூலைக்கரைப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) காளியப்பன், சப்-இன்ஸ்பெக்டர் சண்முகப்பெருமாள் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்