சேலம் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா
சேலம் மாவட்டத்தில் புதிதாக 58 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 59 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று புதிதாக 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாநகர் பகுதியில் 13 பேர், மேச்சேரி, நங்கவள்ளி, வீரபாண்டி, கெங்கவல்லி, மேட்டூரில் தலா ஒருவர், ஓமலூர், சேலம் ஒன்றியம், தாரமங்கலம், ஆத்தூர், பெத்தநாயக்கன்பாளையம், தலைவாசல் ஆகிய பகுதியில் தலா 2 பேர், தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருச்சி, கள்ளக்குறிச்சி ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்து சேலத்துக்கு வந்த 28 பேர் என மொத்தம் மாவட்டத்தில் 58 பேருக்கு தொற்று இருந்தது பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை 1 லட்சத்து 71 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.