கல்லூரி மாணவன் தற்கொலை

கல்லூரி மாணவன் தற்கொலை

Update: 2021-11-03 19:57 GMT
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மோதூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் அரிகரன் (வயது 19). இவர் பாலக்கோடு அரசு கலை கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஒருவாரமாக கல்லூரிக்கு செல்லவில்லை. அவரை கல்லூரி செல்லும்படி அவருடைய தந்தை அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதில் மனம் உடைந்த அரிகரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
======

மேலும் செய்திகள்