அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடங்கள்

அரசு மேல்நிலைப்பள்ளிக்கு ரூ.2½ கோடியில் புதிய கட்டிடங்கள்

Update: 2021-11-03 18:43 GMT
உப்பிலியபுரம், நவ.4-
உப்பிலியபுரத்தை அடுத்த பி.மேட்டூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் இப்பகுதியை சேர்ந்த 570 மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு போதிய இடவசதியில்லாததால் கூடுதல் கட்டிடம் கட்ட கல்வித்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி 8 வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வகம், 2 ஆண்கள் கழிப்பறை, 2 பெண்கள் கழிப்பறை, குழாய் வசதியுடன் போர்வெல் குடிநீர், 300 மீட்டர் சுற்றளவு தடுப்புச்சுவர் உள்பட தரைதளம், முதல்தளம், இரண்டாவது தளம் என ரூ.2 கோடியே 31 லட்சத்து 47 ஆயிரத்தில் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. இந்த கட்டிடங்களை நேற்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் முசிறி மாவட்ட கல்வி அலுவலர் பாரதிவிவேகானந்தன், வட்டார கல்வி அலுவலர் ஆனந்தராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கருணாகரன், பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தபொன்மணி, மைனர்தியாகராஜன், ஆசிரியர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள்  கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்