வாலிபரிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

வாலிபரிடம் 3 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது

Update: 2021-11-03 17:53 GMT
பாடாலூர்
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 27). இவர் சொந்த வேலை நிமித்தமாக பாடாலூர் சந்தைப்பேட்டை அருகே சென்றபோது மர்ம நபர்கள் வழிமறித்து உதவி கேட்பது போல் நடித்து அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டனர். இதுகுறித்து விஜயகுமார் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்

மேலும் செய்திகள்