தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

மயிலாடுதுறையில் தூக்குப்போட்டு வாலிபா் தற்கொலை செய்து கொண்டாா்.

Update: 2021-11-03 17:21 GMT
மயிலாடுதுறை:
மயிலாடுதுைறயில் தூக்குப்போட்டு வாலிபா் தற்ெகாைல செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு  தற்கொலை 
மயிலாடுதுறை கூறைநாடு திருமஞ்சன வீதியை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகன் முருகன் (வயது 25). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் முருகனின் தாய் ஜோதி தரைக்கடை போட்டு புடவை வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் அங்கு வந்த முருகன் தனது தாய் ஜோதியிடம், வியாபாரம் செய்ய உதவி செய்வதாக கூறியுள்ளார். அதற்கு அவரது தாய் ஜோதி வீட்டிற்கு செல்லுமாறு கூறியதாக தெரிகிறது. இதனையடுத்து வீட்டிற்கு சென்ற முருகன், வீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்