தீபாவளி பண்டிகை கொண்டாட வேலூர் மத்திய ஜெயில் கைதிகள் 15 பேருக்கு பரோல்

வேலூர் மத்திய ஜெயில் கைதிகள் 15 பேருக்கு பரோல்

Update: 2021-11-03 16:21 GMT
வேலூர்

வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் ஜெயிலில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என்று 700-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடுவதற்கு பரோல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அதன்படி, இந்தாண்டு தீபாவளி பண்டிகையை கொண்டாட பரோல் வழங்கும்படி 30-க்கும் மேற்பட்ட நன்னடத்தை கைதிகள் ஜெயிலில் அதிகாரிகளிடம் மனு அளித்திருந்தனர். அவற்றின் மீது பரிசீலனை செய்து 15 பேருக்கு 3 நாட்கள் பரோலில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்