அனுமதியின்றி நடந்த காளை விடும் திருவிழா. போலீசார் தடுத்து நிறுத்தினர்
அனுமதியின்றி நடந்த காளை விடும் திருவிழா
காட்பாடி
காட்பாடி தாலுகா காசிகுட்டை கிராமத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று காளை விடும் திருவிழா நடத்த பொதுமக்கள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று காலை சுமார் 6 மணிக்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட காளைகளை வாகனங்களில் கொண்டு வந்தனர்.
பின்னர் ஒவ்வொரு காளையாக சாலையில் விடப்பட்டது. சுமார் 8 காளைகள் சென்றபின் தகவல் அறிந்த விருதம்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். காளை விடும் திருவிழாவை தடுத்து நிறுத்தினர்.
அனுமதியில்லாமல் விழா நடந்ததால் திருவிழாவை காணவந்த பொதுமக்களை திருப்பி அனுப்பினர். காளைகளை கொண்டு வந்தவர்களை திருப்பி அழைத்து செல்லுமாறு போலீசார் எச்சரித்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.