திருப்பத்தூர் மாவட்டத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் சிறப்புமுகாம். 9-ந் தேதி தொடங்குகிறது
திருப்பத்தூர் மாவட்டத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.;
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டத்தில் பட்டா பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் சிறப்பு முகாம் வருகிற 9-ந் தேதி தொடங்குகிறது.
தீர்வு காணும் சிறப்பு முகாம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் முகாம் டிசம்பர் மாதம் வரை புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நடக்கிறது. முகாமில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திலும் கணினி பதிவேற்றத்தில் ஏற்பட்டுள்ள சிறிய பிழைகள், கணினியில் பட்டா வரப்பெறாமல் உள்ள இனங்கள், பட்டாதாரர் பெயர் கணினி பதிவேற்றத்தில் மாறியுள்ள இனங்களுக்கு தீர்வு காணப்படுகிறது.
நாளை (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை என்பதால் நாளை நடைபெற இருந்த சிறப்பு முகாம் 9-ந் தேதி நடைபெறும். திருப்பத்தூர் தாலுகா லக்கிநாயக்கன்பட்டி, காக்கங்கரை சின்னகண்ணாலப்பட்டி, பெரியகண்ணாலப்பட்டி, எர்ரம்பட்டி கிராமங்களுக்கு காக்கங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 10-ந் தேதியும், நத்தம் நாவிந்தம்பட்டி, கருங்காலிப்பட்டி, சொக்கனாம்படி, கெங்கிநாயக்கன்பட்டி, சுந்தரம்பள்ளி ஆவல்நாயக்கன்பட்டி, கிருஷ்ணாபுரம், புதுப்பட்டி ஆகிய கிராமங்களுக்கு சுந்தரம்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் 12-ந் தேதியும் நடக்கிறது.
பொதுமக்கள் பயன்படுத்து கொள்ள வேண்டும்
நாட்டறம்பள்ளி தாலுகாவில் ஆத்தூர்குப்பம், குடியானகுப்பம் கிராமங்களுக்கு ஆத்தூர்குப்பம் கிராம நிர்வாக அலுவலகத்தில் 10- தேதியும், பணியாண்டப்பள்ளி கிராமத்திற்கு ஜெயபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் 12-ந் தேதியும் நடக்கிறது.
வாணியம்பாடி தாலுகாவில் பீமகுளம், நாய்க்கனூருக்கு பீமகுளம் பஞ்சாயத்து அலுவலகத்தில் 10-ந் தேதியும், கிரிசமுத்திரம், நெக்னாமலை கிராமங்களுக்கு கிரிசமுத்திரம் கிராமத்தில் 12-ந் தேதியும் நடக்கிறது.
ஆம்பூர் தாலுகாவில் பெரியகொமேஸ்வரம், பார்வதம்பட்டரை, சாத்தம்பாக்கம் ஆகிய கிராமங்களுக்கு சாத்தம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலகத்தில் 10-ந் தேதியும், கரும்பூர், கதவாளம், பார்சனாபள்ளி கிராமங்களுக்கு கரும்பூர் சாமுதய கூடத்தில் 12-ந் தேதியும் நடக்கிறது.
இந்த வாய்ப்பினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் அமர்குஷ்வாஹா கேட்டுக்கொண்டுள்ளார்.