தினத்தந்தி புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-11-03 14:38 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
பெயர் பலகையில் நோட்டீஸ்
ஆத்தூர் தாலுகா சித்தையன்கோட்டையில் இருந்து சேடப்பட்டி வழியாக செல்லும் இணைப்பு சாலை, திண்டுக்கல்-குமுளி சாலையுடன் சேரும் இடத்துக்கு முன்பு வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டு உள்ளது. இந்த பெயர் பலகையில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால், ஊர்களின் பெயர்களை பார்க்க முடியவில்லை. இதனால் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் சிரமப்படுகின்றனர். இந்த பெயர் பலகையை சரிசெய்ய வேண்டும். 
-ராமு, செம்பட்டி.
நள்ளிரவில் அணைக்கப்படும் தெருவிளக்கு 
திண்டுக்கல்லை அடுத்த பள்ளப்பட்டி ஹரிணிநகரில் நள்ளிரவுக்கு பின்னர் தெருவிளக்குகள் எரிவதில்லை. நள்ளிரவில் தெருவிளக்குகளை யாரோ அணைத்து விடுகின்றனர். இதனால் அந்த பகுதி முழுவதும் இருளில் மூழ்கி விடுகிறது. எனவே தெருவிளக்குகளை அணைக்காத வகையில் சுவிட்ச் பெட்டியை மாற்றி வைக்க வேண்டும். 
-விஜயகுமார், பள்ளப்பட்டி.
சேதமடைந்த சாலை 
திண்டுக்கல் மாவட்டம் சிலுவத்தூர் அருகே உள்ள மணியக்காரன்பட்டியில் தார்சாலை சேதம் அடைந்து விட்டது. சாலை முழுவதும் குண்டும், குழியுமாக இருப்பதால் அதில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியவில்லை. மேலும் அந்த வழியாக பள்ளிக்கு சைக்கிளில் செல்லும் மாணவர்கள் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும். 
-ராஜா, புகையிலைபட்டி.
சாலையில் ராட்சத பள்ளம்
உத்தமபாளையத்தில் கால்நடை மருத்துவமனை அருகே முத்துகருப்பணசாமி கோவிலுக்கு செல்லும் சாலையில் ராட்சத பள்ளம் உருவாகி விட்டது. அந்த வழியாக இரவில் செல்பவர்கள் தடுமாறி பள்ளத்தில் விழுந்து விடுகின்றனர். எனவே பள்ளத்தை சரிசெய்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
-ராம், உத்தமபாளையம்.

மேலும் செய்திகள்