வரைவு வாக்காளர் பட்டியல் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கு இறுதிப்பட்டியலாக இருக்கும்

வரைவு வாக்காளர் பட்டியல் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கு இறுதிப்பட்டியலாக இருக்கும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.

Update: 2021-11-03 14:06 GMT
சிவகங்கை, 
வரைவு வாக்காளர் பட்டியல் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கு இறுதிப்பட்டியலாக இருக்கும் என்று மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி கூறினார்.
வரைவு பட்டியல்
சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டு விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் சவுந்தர்ராஜன், ஆர்.டி.ஓ.க்்கள் முத்துக்கழுவன் (சிவகங்கை) பிரபாகரன், (தேவகோட்டை), தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ராஜா மற்றும் அங்கீகரிக்கப ்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில தி்.மு.க. மாவட்ட துணைச் செயலாளர்கள் சேங்கை மாறன், மணிமுத்து, நகர கழக செயலாளர் துரை ஆனந்த், அ.தி.மு.க. சார்பில் ரமேஷ், சேதுபதி, காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட துணைத் தலைவர் சண்முகராஜன் மற்றும் விஜயகுமார், தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட தலைவர் பெரோஸ் காந்தி, பாஜக நகர் தலைவர் தனசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் முத்து ராமலிங்கபூபதி, உலகநாதன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட அதை அங்கீகரிக்கப்பட்ட கட்சியினர் பெற்றுக் கொண்டனர். 
பின்னர் கலெக்டர் பேசியதாவது:- சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி திருப்பத்தூர் சிவகங்கை மானாமதுரை (தனி) ஆகிய 4 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில் தற்பொது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. 
மேலும் தற்போது முதல் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றம், செய்தல் ஆகியவைகளை செய்யலாம். இதற்காக வருகிற 13 மற்றும் 14-ந் தேதியும் 27 மற்றும் 28-ந் தேதியும் சிறப்பு முகாம்கள் வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. 
மனு
இதுதவிர பொதுமக்கள் அனைத்து நாட்களிலும் ஆன்லைன் மூலமாகவோ அல்லது தாலுகா அலுவலகங்களிலும் அல்லது வாக்குச்சாவடி அலுவலர்களிடமும் வாக்காளர் பட்டியல் சுத்தத்திற்கான மனுக்களை கொடுக்கலாம். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் கடந்த தேர்தலில் இருந்ததைவிட 3,767 பேர் புதியதாக சேர்க்கப்பட்டு உள்ளனர். ஏற்கனவே இருந்த பேர்களில் 1,585 பேர் நீக்கப்பட்டு உள்ளனர். மேலும் மாவட்டத்தில் ஏற்கனவே 1,348 வாக்குச்சாவடிகள் இருந்தன. 
தற்போது கூடுதலாக ஆறு வாக்குச்சாவடிகள் சேர்க்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சிவகங்கை மாவட்டத்தில் ஆயிரத்து 354 வாக்குச்சாவடிகள் உள்ளன. தற்போது ஈடுபட்டுள்ள இந்த வரைவு வாக்காளர் பட்டியல் நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலுக்கும் இறுதி பட்டியலாக இருக்கும். நகராட்சி, பேரூராட்சி தேர்தலை பொறுத்தவரை 1,200 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடி இரண்டாகப் பிரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் பாஜக நகர தலைவர் தனசேகரன் பேசியதாவது :- நகராட்சி வாக்காளர்களை பொறுத்தவரைஒரு வீட்டில் உள்ள 4 பேர்களில் ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வாக்குச் சாவடி ஆக மாறிமாறி உள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிடுபவர்கள் அவர் குடும்பத்தின் வாக்குகளை கூட பெற முடியாத நிலை உள்ளது.
சேதுபதி (அ.தி.மு.க.) கூறியதாவது:- இந்த புகார் அனைத்து வார்டுகளிலும் உள்ளது.
பாதிப்பு
சண்முகராஜன் (காங்கிரஸ்):- வாக்காளரின் பெயர் பட்டியலில் மாறி உள்ளது. இதனால் தேர்தலில் போட்டி யிடுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.
சேங்கைமாறன் (திமுக):- தற்போது அறிவிக்கப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் நகராட்சி பேரூராட்சி இறுதிப் பட்டியலாக இருக்கும் என்றால் அதில் உள்ள தவறுகளை திருத்துவதற்கு வாய்ப்பு உள்ளதா இதுதொடர்பாக தனியாக கூட்டம் நடத்தப்படுமா என்று கேட்டனர்.
இதற்கு கலெக்டர் கூறியதாவது:-
நகராட்சி பேரூராட்சி தேர்தலைப் பொருத்தவரை விரைவாக பணிகளை செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது. அதன்படி வருகிற 6-ந் தேதி இதற்கான அனைத்துக்கட்சியினர் கூட்டம் நடைபெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்