66 பேருக்கு கொரோனா

66 பேருக்கு கொரோனா

Update: 2021-11-03 13:50 GMT
திருப்பூர்
தமிழகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 962 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் 66 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் கோவை மற்றும் திருப்பூரில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 95 ஆயிரத்து 608ஆக உள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 74 பேர் குணமடைந்தனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆயிரத்து 883-ஆக உள்ளது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 743 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதற்கிடையே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் நேற்று பலியானார். இதனால் பலி எண்ணிக்கை 982ஆக உயர்ந்துள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் பல வாரங்களாக நாள் ஒன்றின் கொரோனா பாதிப்பு 100க்கு கீழ் குறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் செய்திகள்