காஞ்சீபுரத்தில் 6-ந்தேதி மின்வினியோகம் நிறுத்தம்

காஞ்சீபுரத்தில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிக்காரணமாக 6-ந்தேதி மின்வினியோகம் தடை செய்யப்படும். இதுக்குறித்து காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் கூறியதாவது:-;

Update: 2021-11-03 06:30 GMT
காஞ்சிபுரம்,

காஞ்சீபுரம் துணை மின் நிலையத்தில் அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் வருகிற 6-ந்தேதி (சனிக்கிழமை) மேற்கொள்ளப்பட உள்ளது. அந்த நேரத்தில் காஞ்சீபுரம் நகரத்தை சுற்றியுள்ள சில பகுதிகளான ஒலிமுகமதுப்பேட்டை, வெள்ளைகேட், கீழம்பி, சிறுகாவேரிப்பாக்கம், நெட்டேரி, சி.வி.எம். நகர், ஜே.ஜே. நகர், புதுநகர், ஈஞ்சம்பாக்கம், விஷகண்டிகுப்பம், மோட்டூர், செம்பரம்பாக்கம், செட்டியார்பேட்டை, பொன்னேரிக்கரை, அன்னை தெரசா நகர், ஆரியபெரும்பாக்கம், புதுபாக்கம், பெரியகரும்பூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் அன்றையதினம் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படும்.

இந்த தகவலை காஞ்சீபுரம் வடக்கு கோட்ட செயற்பொறியாளர் சரவணதங்கம் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்