ஆய்வு கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.

Update: 2021-11-03 06:24 GMT
காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஊரக வளர்ச்சி முகமை கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ஆதி திராவிடர்களுக்கு அரசால் மேற்கொள்ளப்படும் நலத்திட்டங்கள் குறித்த ஆய்வை தேசிய பட்டியல் இன ஆணையத்தின் துணைத்தலைவர் அருண் ஹல்தார் தலைமை தாங்கினார். டாக்டர் ஆர்த்தி முன்னிலை வகித்தார்.

வன்கொடுமை தடுப்பு சட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், வன்கொடுமை வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராதான் மந்திரி கிராம அவாஸ் யோஜனா திட்டம் முழுமையாக ஆதிதிராவிடர் மக்களுக்கு செலவிடப்படுகிறதா என்பதையும் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ஆதிதிராவிடர் பகுதியில் நன்றாக செயல்படுத்தப்படுகிறது என்பதற்கு பாராட்டு தெரிவித்தார்.

ஆதி திராவிடர் மக்கள் தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கைகளை எழுத்து மூலமாக ஆணையத்திற்கு அனுப்பிட கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்த கூட்டத்தில், சென்னை தேசிய பட்டியல் இன ஆணையத்தின் இயக்குனர் டாக்டர் சுனில்பாபு, மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வம், திட்ட இயக்குனர் ஊராக வளர்ச்சி முகமை ஸ்ரீதேவி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜஸ்ரீ, காவல் துறையின் சார்பில் சமூக பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகள் பிரிவு அலுவலர்கள் காஞ்சீபுரம் மாவட்ட சங்க பிரிதிநிதிகள் மற்றம் இதர துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்