மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் விபரீத முடிவு - போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

திருமங்கலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-11-03 06:03 GMT
திரு.வி.க.நகர்,

சென்னை திருமங்கலம் 18-வது மெயின் ரோட்டில் வசித்து வந்தவர் வேதமாணிக்கம் (வயது 34). இவரது மனைவி மாலதி (32). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் ஒரு மகள் உள்ளார். தூத்துக்குடியை பூர்விகமாக கொண்ட வேதமாணிக்கம், அண்ணா நகர் போலீஸ் நிலையத்தில் முதுநிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு தனது பணியை முடித்து வீட்டிற்கு சென்ற வேதமாணிக்கத்துக்கும் அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில் திடீர் என படுக்கை அறைக்கு சென்ற வேதமாணிக்கம் நீண்ட நேரமாகியும் வெளியே வராதது கண்டு மனைவி மாலதி ஜன்னல் வழியாக சென்று பார்த்துள்ளார்.

அப்போது வேதமாணிக்கம் தூக்குப்போடு கொண்டு உயிருக்கு போராடியதை பார்த்து அதிர்ச்சியடைந்து கதறி அழுதார். மாலதி கதறி அழும் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஒடி வந்து உயிருக்கு போராடிய வேதமாணிக்கத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். அதைத்தொடர்ந்து திருமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் உடலை கைப்பற்றி அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்