பஸ் மோதி கம்ப்யூட்டர் என்ஜீனியர் பலி எதிரொலி: விபத்துக்கு காரணமான பள்ளம் சீரமைப்பு

கிண்டி-சின்னமலை பகுதியில் பஸ் மோதி கம்ப்யூட்டர் என்ஜீனியர் பலியானார்.இதன் எதிரொலியாக விபத்துக்கு காரணமான பள்ளத்தை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்தனர்.

Update: 2021-11-03 03:52 GMT
ஆலந்தூர்,

சென்னையை அடுத்த ராமாபுரத்தை சேர்ந்தவர் முகமது யூனுஸ் (வயது 28). கம்ப்யூட்டர் என்ஜீனியரான இவர், நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் கிண்டி-சின்னமலை பகுதியில் வந்தபோது, மாநகர பஸ் ஒன்று சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்கியதில், நிலைதடுமாறி யூனுஸ் மீது மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த அவர் மீது பஸ்சின் பின் சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இது குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையறிந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்தனர்.

இதற்கிடையே விபத்துக்கு காரணமான பள்ளத்தை சீர் செய்யாத அதிகாரி யார்? போன்ற விவரங்களை வழங்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு கிண்டி போக்குவரத்து துறை போலீசார் விவரம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்