சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

சேலம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது

Update: 2021-11-02 20:33 GMT
சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. நேற்று புதிதாக 59 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி படுத்தப்பட்டது. அதன்படி மாநகர் பகுதியில் 9 பேர் பாதிக்கப்பட்டனர். மேச்சேரி, கெங்கவல்லியில், தலா ஒருவர், நங்கவள்ளி, ஓமலூரில் தலா 2 பேர், வீரபாண்டியில் 3 பேர், மேட்டூரில் 4 பேர் பாதிக்கப்பட்டனர். தர்மபுரி, நாமக்கல், ஈரோடு, திருச்சி, கள்ளக்குறிச்சி, சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலத்திற்கு வந்த 37 பேர் உள்பட மொத்தம் 59 பேர் பாதிக்கப்பட்டனர். அதன்படி இதுவரை ஒரு லட்சத்து 13 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். 97 ஆயிரத்து 739 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். இதுரை 1,685 பேர் இறந்தனர்.

மேலும் செய்திகள்