தினத்தந்தி புகார் பெட்டி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார்பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-11-02 19:54 GMT
பழுதடைந்த மின்கம்பம்
தஞ்சை மாவட்டம் வாளமர்கோட்டை கிராமத்தில் மயானம் அருகே உள்ள ஒரு மின்கம்பம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் எந்த நேரமும் விபத்து காத்து கிடக்கிறது. மயானத்திற்கு ஈமசடங்குகள் செய்பவர்கள் அச்சத்துடன் வருகிறார்கள். எனவே மின்கம்பத்தை மாற்றி தரக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. மேலும் மழை காலமாக இருப்பதால் மின்சார கசிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-செந்தில், வாளமர்கோட்டை.
மின்விளக்கு எரியுமா?
தஞ்சை-புதுக்கோட்டை சாலை பழைய வீட்டு வசதி குடியிருப்பு பிரிவு சாலையில் உள்ள மின்கம்பத்தில் மின்விளக்குகள் கடந்த சில மாதங்களாக எரியவில்லை. இதனால் அந்த பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் பழைய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் உள்ள பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகிறார்கள். வாகனங்கள் வேகமாக வருவதால் இருள் சூழ்ந்த பகுதியில் சாலையை கடப்பதற்கு பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகிறார்கள். மேலும் பள்ளிக்கூடம் அந்த பகுதியில் உள்ளதால் விடுதி மாணவ-மாணவிகள் அவதிப்படுகிறார்கள். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் மின்விளக்குகள் எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், பழைய வீட்டுவசதி வாரியம்.

மேலும் செய்திகள்