ஆண்டிமடம்
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே விழுதுடையான் கிராமத்தில் ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஜெயமதி (வயது 46) என்பவர் மது விற்றபோது பிடிபட்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து, விற்பனைக்காக வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.