2 மாடுகள் திருட்டு போனது குறித்து போலீசில் புகார்
2 மாடுகள் திருட்டு போனது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
வேப்பந்தட்டை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டையை அடுத்துள்ள வெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 38). விவசாயியான இவர் ஊருக்கு அருகே வயலில் கொட்டகை அமைத்து மாடுகளை வளர்த்து வருகிறார். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வயலுக்கு சென்று பார்த்தபோது பட்டியில் கட்டியிருந்த 2 பசு மாடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அரும்பாவூர் போலீசில் பாலகிருஷ்ணன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்