வீட்டின் மேற்கூரை விழுந்ததில் மூதாட்டி பலி
அருப்புக்கோட்டை அருகே வீட்டின் ேமற்கூரை சரிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார்.
அருப்புகோட்டை,
அருப்புக்கோட்டை அருகே வீட்டின் ேமற்கூரை சரிந்து விழுந்ததில் மூதாட்டி பலியானார்.
மூதாட்டி பலி
அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி சேதுராஜபுரத்தை சேர்ந்தவர் சீரங்கம்மாள் (வயது 81). இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சீரங்கம்மாள் வீட்டின் வாசலில் துணி துவைத்து கொண்டு இருந்தார். அப்போது மழை காரணமாக வீட்டின் மேற்கூரை சரிந்து சீரங்கம்மாள் தலையில் விழுந்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து சீரங்கம்மாள் மகள் பவுன்தாய் (56) பந்தல்குடி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.