வேன் மோதியதில் கார் சேதம்
தளவாய்புரம் அருகே வேன் மோதியதில் கார் சேதமானது.
தளவாய்புரம்,
தளவாய்புரம் அருகே கூனங்குளம் பகுதியை சேர்ந்த முத்துமணி (வயது 38) என்பவர் தனது காரில் சேத்தூர் பகுதியிலிருந்து முதுகுடிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது கொல்லங்கொண்டான் விளக்கு அருகே கார் சென்றபோது எதிரே வந்த வேன் பயங்கரமாக கார் மீது மோதியது. இதில் காரின் முன்பக்கம் சேதமடைந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுபற்றி உடனே சேத்தூர் புறநகர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜமீன் கொல்லங்கொண்டான் பகுதியைச் சேர்ந்த வேன் டிரைவர் இசைத்துரை (30) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.