197 நாடுகளின் தேசிய கொடியுடன் 2,800 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொள்ளும் ராணுவ வீரர் விராலிமலை வந்தடைந்தார்

2,800 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொள்ளும் ராணுவ வீரர் விராலிமலை வந்தடைந்தார்.;

Update: 2021-11-02 18:51 GMT
விராலிமலை:
சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அருகே உள்ள சோமநாதபுரத்தை சேர்ந்தவர் ராணுவ வீரர் பாலமுருகன் (வயது 33). இவர், மணிப்பூர் மாநிலத்தில் சிப்பாயாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கொரோனா அதிகரித்த காலத்தில் தன் உயிரையும், பணயம் வைத்து கொரோனாவை கட்டுப்படுத்த பெரும் முயற்சி மேற்கொண்ட அனைத்து நாட்டு பிரதமர்கள், முதல்-அமைச்சர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், ராணுவத்தினர், காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள், அரசுத்துறை அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி செலுத்தும் விதமாக 197 நாடுகளின் தேசிய கொடியை சைக்கிளில் கட்டிக் கொண்டு ராமேசுவரம் பாம்பன் பாலத்தில் இருந்து அயோத்தி வரை 2,800 கிலோ மீட்டர் நடை பயணமாக கடந்த அக்டோபர் மாதம் 16-ந் தேதி புறப்பட்டார். இந்நிலையில் அவர் நேற்று விராலிமலை வந்தடைந்தார். அப்போது பாலமுருகன் கூறுகையில், கொரோனாவால் உயிரிழந்த அனைத்து நாட்டு மக்களுக்கும் நினைவுகூறும் நோக்கத்தில் அணையா விளக்கு ஏற்றியும், மனித இனத்தை காக்க 2 கொரோனா தடுப்பூசி அவசியம் செலுத்திக் கொள்ள வேண்டும். கொரோனாவால் தாய்-தந்தையை இழந்த குழந்தைகளை, நம் குழந்தைகள் போல் அனைவரும் பராமரிக்க வேண்டும். அவர்களின் கல்வி மேம்பட உதவ வேண்டும். பொருளாதாரத்தில் வீழ்ச்சி அடைந்த இந்த நேரத்தில் அனைத்து நாடுகளும் இணைந்து மனித இனத்தை காக்க கொரோனாவை ஒழிக்க நிரந்தர மருந்து கண்டுபிடிக்க வேண்டும் என்றார்.

மேலும் செய்திகள்