கொரோனா சிகிச்சையில் 16 பேர் டிஸ்சார்ஜ்
கொரோனா சிகிச்சையில் 16 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்து 202 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா சிகிச்சையில் 16 பேர் டிஸ்சார்ஜ் ஆகினர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 29 ஆயிரத்து 656 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு தற்போது 130 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் கொரோனாவுக்கு இறப்பு எண்ணிக்கை 416 ஆக உள்ளது.