கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி
கரூரில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலியானார்.;
கரூர்,
22 பேருக்கு தொற்று
கரூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் நேற்று புதிதாக 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும் ஒருவர் பலி
கொரோனாவுக்கு ஏற்கனவே சிகிச்சை பெற்று வந்த 17 பேர் குணமடைந்து உள்ளனர். இவர்கள் அனைவரும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஒருவர் பரிதாபமாக இறந்தார். தற்போது 222 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.