ஆடு மேய்க்க சென்ற பள்ளி மாணவி கற்பழிப்பு
ஆடு மேய்க்க சென்ற பள்ளி மாணவி கற்பழித்ததாக கட்டிட தொழிலாளி போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரவக்குறிச்சி,
அரவக்குறிச்சியில் 10-ம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று முன்தினம் ஆடு மேய்த்துக்கொண்டு இருந்தார். அப்போது கட்டிட தொழிலாளி சிவசுப்பிரமணி (34) என்பவர் மாணவியை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் சிவசுப்பிரமணியை மடக்கி பிடித்து தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிவசுப்பிரமணியை (34)அரவக்குறிச்சி போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.