வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமநாதபுரம்,
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி வாலிபரிடம் ரூ.3 லட்சம் மோசடி செய்த 2 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு வேலை வாங்கி தருவதாக
ராமநாதபுரம் அருகே உள்ள தேர்ந்தங்கால் பகுதியைச் சேர்ந்தவர் பச்சமால். இவருடைய மகன் சத்தியராஜ் (வயது29) எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங் டிப்ளமோ படித்த இவருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மஞ்சகொல்லையை சேர்ந்த ஒருவர் சத்தியராஜ் மற்றும் அவரது தாயாரிடம் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பிய சத்தியராஜ், சென்னையைச் சேர்ந்த தேவன் வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம், நாகேந்திர ராவ் வங்கி கணக்கில் ரூ.2 லட்சத்து 90 ஆயிரம் செலுத்தியுள்ளார்.
போலீசில் புகார்
இதனை வாங்கிய நிலையில் வேலை வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்துள்ளனர். இது தொடர்பாக ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சத்தியராஜ் புகார் அளித்தார். இதன்படி ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கந்தசாமி வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.