மின்வேலியில் சிக்கி பெண் பலி

களம்பூர் அருகே மின்வேலியில் சிக்கி பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக நிலத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-11-02 18:09 GMT
ஆரணி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த களம்பூர் அருகே உள்ள இலுப்பகுணம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 28). இருளர் இனத்தை சேர்ந்த இவரது மனைவி சந்தியா (20). நேற்று முன்தினம் இரவு  கனமழை பெய்தது. 

இதன் காரணமாக படுக்க இடம் இல்லாமல் அங்குள்ள ரேஷன் கடை அருகே படுப்பதற்காக குழந்தையுடன் சென்று கொண்டிருந்தார். 

அப்போது சாலையோரம் உள்ள நிலத்தில் எலி தொல்லைக்காக வைத்திருந்த மின் வேலியை சந்தியா மிதித்ததாக கூறப்படுகிறது. இதில் அவர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். 

இது குறித்து ஏழுமலை களம்பூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து, நிலத்தின் உரிமையாளர் ஜெயபாலை கைது செய்தார். 

மேலும் செய்திகள்