பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்
பா.ம.க., வன்னியர் சங்கத்தினர் சாலை மறியல்;
ஆம்பூர்
வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை மதுரை ஐகோர்ட்டு கிளை ரத்து செய்தது. மீண்டும் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் பகுதியில் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உமராபாத் போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சாலைமறியல் காரணமாக சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.